|
பிரதமரின் கேலிக்கூத்து...
பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என்று ஆனதிலிருந்து பெட்ரோல் விலையை கட்டுப்பாடு இல்லாமல் உயர்த்தி வாட்டி வதைக்கிறது மத்திய அரசு. வசதி படைத்தவர்கள் செல்லும் விமான எரிபொருளின் விலையோ ரூ.65-தான். ஆனால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலின் விலையோ ரூ.71-. இதுதான் மத்திய அரசின் பொருளாதார கோமாளித்தனம். இதைவிட கொடுமை என்னவென்றால் ``பெட்ரோல் விலை உயர்வு நல்லதுதான் அப்போதுதான் நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருக்கும் என்று மக்களை கேலி செய்கிறார் பொருளாதாரப் புலி? அலுவாலியா
திட்ட கமிஷனின் வறுமைக்கோடு அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்வது போல் உள்ளது. நகரத்தில் வசிப்போர் ரூ.32-ம், கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.25-ம் தினமும் பெற்றால் அவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள், வசதியானவர்கள் என்று அறிவித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது ஆகும்.
உலகமயம் என்னும் ஆட்கொல்லி மக்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து இடதுசாரிகள் கூறி வரும்போது, செவிடன் காதில் ஊதும் சங்காய் இருந்துவிட்டு, இன்று ஐ.நா. சபையில் பிரதமர் ஆற்றிய உரையில் உலகமயம் இந்தியாவை பாதித்துள்ளது என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலையே! சாதாரண மக்கள் பிரச்சனைகளுக்கு நிற்காமல், முதலாளிகளுக்கும், வசதிபடைத்தவர்களுக்கும் பல்லக்குத் தூக்கும் அரசாக இருக்கும் வரையில் இந்த கேலிக்கூத்துகள் தொடர்ந்து அரங்கேறும்.
|
|